Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீகாரில் திட்டமிட்டபடி தேர்தல்: உச்சநீதிமன்றம் அதிரடி

ஆகஸ்டு 28, 2020 07:52

டெல்லி: கொரோனா பரவலை காரணம் காட்டி பீகார் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் நடப்பு சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. நவம்பர் 28ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவியேற்கவில்லை எனில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடும்.

இந்த நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பீகாரில் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதி நிலவரப்படி பீகாரில் இதுவரை 1.22 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர, அதிக பாதிப்பானோர் பட்டியலில் இந்திய அளவில் பீகார் 5வது இடத்தில் உள்ளது.

இதை கருத்தில் கொண்ட பீகார் மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவி வருவதால் சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் எனவும் கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்த பிறகு தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், கொரோனாவை காரணம் காட்டி பீகார் சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்