Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பொதுப் போக்குவரத்தை இயக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்: கமல்ஹாசன்

ஆகஸ்டு 29, 2020 08:38

சென்னை: பொதுப் போக்குவரத்தை ஓரளவாவது இயக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'கொரோனாவை  பற்றி மருத்துவ உலகமே குழம்பித் தவித்த காலம் தாண்டி இப்போது மக்களே விழிப்புணர்வு பெற்று விட்டனர்.  இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரை முடக்கி வைப்பது பொருளாதார சீர்கேடு என்ற அசாதாரண நிலையோடு, வேலைக்கு செல்ல இயலாத அடித்தட்டு  மக்களின் வாழ்வாதாரம் அபாயக்கட்டத்திற்கு செல்லவே வழி வகுக்கும்.  எனவே வரும் ஆகஸ்ட்31 க்குப்பின் ஊரடங்கு தேவைதானா என்று அரசு  பரிசீலிக்க வேண்டும். 

மக்கள்  வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தரவேண்டும். அதற்கு இ-பாஸ் தளர்வு மட்டும் போதாது. அரசு, பொதுப்போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்யவேண்டும். ஊரடங்கு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து நல்ல முடிவை எடுத்து அறிவிக்க  வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது' 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்