Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரவுடியால் கொல்லப்பட்ட போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிதியுதவி

ஆகஸ்டு 31, 2020 10:58

திருநெல்வேலி: நெல்லை அருகே, ரவுடியால் கொல்லப்பட்ட, போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, காவல்துறை சார்பில், ரூ.86 லட்சத்து 50ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

பல்வேறு கொலை வழக்குகளிலும் தொடர்புடையவரும், காவல்துறையிரால் பலநாட்களாகத் தேடப்பட்டு வந்தவருமான ரவுடி துரைமுத்துவைப் பிடிப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி திருநெல்வேலிக்கு அருகே மலையடிவாரத்தில் உள்ள வனப்பகுதிக்கு போலீஸ்படை சென்றது. அப்போது அந்த ரவுடி வீசிய வெடிகுண்டால், சம்பவ இடத்திலேயே பலியான போலீஸ்காரர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு, காவல்துறை சார்பில் உதவிட, நிதிவழங்குமாறு மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.முருகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

அதனை ஏற்றுக்கொண்ட காவல்துறை பணியாளர்கள், அவரவர் விருப்பத்திற்கேற்ப, நிதி வழங்கினார். அதன்படி பெறப்பட்ட மொத்தத்தொகையான, 86 லடசத்து, 50ஆயிரம் ரூபாய் நிதியினை, தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல்சரகத்துக்கு உட்பட்ட, பண்டாரவிளை கிராமத்தில், போலீஸ்காரர் சுப்பிரமணியனின் வீட்டுக்கு நேரில் சென்று போலீஸ் ஐ.ஜி.முருகன் வழங்கி, ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில், திருநெல்வேலி சரக போலீஸ் டி. ஐ. ஜி.பிரவீன் குமார் அபினபு மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்