Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமயபுரம் அருகே புதுமணப்பெண் கொலை: கணவர் அருள்ராஜ் கைது

ஆகஸ்டு 31, 2020 11:01

மண்ணச்சநல்லூர்: சமயபுரம் அருகே திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமயபுரம் அருகே கொள்ளிடம் டோல்கேட் வாழவந்தான்புரத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (30).  இவரது மனைவி கிருஷ்டி ராணி (26). இருவருக்கும் கடந்த ஜுலை மாதம் திருமணம் நடைப்பெற்றது. அதிகாலை 3 மணியளவில் கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக செல்வதாக அருள்ராஜிடம் கூறிவிட்டு கிருஷ்டி ராணி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அருள்ராஜும் உறவினர்களும் அவரை தேடியுள்ளனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் ஆடைகள் களையப்பட்டு சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த  தாலி, மோதிரம் உள்பட ஏழு பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.

தகவலறிந்த சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன நிலையில், நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? வன்புணர்வு செய்து கொல்லப்பட்டாரா? எனவும், அருள்ராஜுக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்ததாக கூறப்படுப்படுவதால் அருள்ராஜையும் போலீசார் விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் அருள்ராஜை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தாம்பத்திய உறவுக்கு வராததால் மனைவியை கொலை செய்தாக அவர் ஒப்புக்கொண்டார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, மனைவியின் நகைகளை எடுத்து சென்றதாகவும், ஆடைகளை கலைத்து கற்பழித்தது போன்று நிர்வணமாக்கி கொலை செய்ததாகவும் அருள்ராஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். திருமணமாகி 40 நாட்களுக்குள் புது மணப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்