Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரோட்டில் உர விற்பனையாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை: ரூ.4 கோடி பறிமுதல் என தகவல்

செப்டம்பர் 01, 2020 07:51

ஈரோடு :ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் தனியார் மொத்த உர விற்பனை நிறுவன உரிமையாளரின் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான ராயல் மொத்த உர விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலம் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட புகாரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களிலும் ரெய்டு நடைபெற்றது.

கோவை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் உர விற்பனை நிறுவன உரிமையாளர் சோமசுந்தரத்தின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் சுமார் ரூ.4 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தலைப்புச்செய்திகள்