Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் தாக்காத கைலாசா ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கோரிக்கை

செப்டம்பர் 02, 2020 07:26

மதுரை: ''கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்,''  என மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு மத்தியில் தற்போது ஊரெங்கும் பேச்சாக உள்ளது. கைலாசாவுக்கு தனிக் கொடி, தனி பாஸ்போர்ட், கைலாசாவில் குடியேற விண்ணப்பம் என கண்ணுக்கு தெரியாத கைலாசா அத்தனை பிரபலமாகி வருகிறது.

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நித்தியானந்தா, கைலாசா நாட்டின் தங்க நாணயங்களை வெளியிட்டார். அத்துடன் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியையும் தொடங்கி, 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையை அவர் வெளியிட்டார்.
இதனால் கைலாசா குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. மேலும் 56 இந்து நாடுகளுடன் மட்டுமே தான் வர்த்தகம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார், கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டிருந்தார்.

மாஸ்க் புரோட்டா, கொரோனா தோசை ஆகியவற்றை செய்து கொடுத்து தமிழக மக்களை கவருவது போல் கைலாசா நாட்டு மக்களை கவருவேன் என கடிதம் எழுதியிருந்தார். அதற்கு நித்தியானந்தாவும் பச்சைக் கொடி காட்டும் விதத்தில் பதிலளித்துள்ளார்.
அதுமட்டுமல்ல திருச்சியில் உள்ள சாரதாஸ் துணிக் கடையும் அங்கு கடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்