Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லடாகில் சீனா மீண்டும் ஊடுருவ முயற்சி: இந்திய வீரர்களை கண்டு திருப்பி ஓட்டம் 

செப்டம்பர் 02, 2020 07:26

புதுடெல்லி: எல்லை பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் லடாக்கின் சூமர் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவ முயன்றதை இந்திய வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு, பாங்கோங் த்சோ ஏரி ஆகியவற்றைப் போல சூமர் பகுதியையும் சீனா நீண்டகாலமாக குறிவைத்து வைத்து வருகிறது. அவ்வப்போது சூமர் பகுதிக்குள் ஊடுருவி கூடாரம் அமைப்பதும் இந்திய வீரர்களால் விரட்டியடிக்கப்படுவதும் தொடர் கதையாக இருந்து வந்தது.

கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் எல்லையில் இந்திய வீரர்கள் முழுமையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவின் ஊடுருவலை முறியடிக்க தயார் நிலையில் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சீனாவுடனான மோதலைத் தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் சீனா ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு ஆத்திரமூட்டியே வருகிறது.

இந்த நிலையில் சூமர் பகுதிக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவ முயன்றது. ஆனால், அப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் முழுவீச்சுடன் தயார் நிலையில் இருந்ததை கண்டு சீனா வீரர்கள் பின்வாங்கி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 3 நாட்களில் சீனா மேற்கொண்ட 3வது ஊடுருவல் முயற்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்