Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 03, 2020 05:33

திருநெல்வேலி: திருநெல்வேலியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி தலைவர்களின் உரிமைகளை பாதுகாத்திட வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில், நெல்லை மாவட்டம்  தாழையூத்து, ஈரோடு மாவட்டம்  சென்னிமலை, விருதுநகர் மாவட்டம்  கொட்டக்கட்சி ஏந்தல், சேலம் மாவட்டம் டி.கோணகாபாடி  உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்கள், குறிப்பாக தலித்தலைவர்கள் பல வழிகளிலும், சாதி ஆதிக்க வெறியர்களால், இழிவுபடுத்தப் படுவதைக் கண்டித்தும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாத்திட வலியுறுத்தியும், திருநெல்வேலியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி" சார்பில்,   நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பாக  நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னணியின் தலைவர் மதுபால் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் கோபாலன், துவக்கி வைத்தார்.

திராவிடர் தமிழர் கட்சியின், மாநில பொதுச்செயலாளர் கதிரவன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின், மாவட்டத்தலைவர் கனி, தமிழர் கட்சியின், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி,  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்,  செயற்குழு உறுப்பினர் சுடலைராஜ், தமிழ்ப்புலிகள் கட்சியின், மாவட்டச் செயலாளர் தமிழரசன், ஆதித் தமிழர் பேரவையின், மாவட்டச் செயலாளர் கலை கண்ணன், புத்தமத அமைப்பாளர் கவி சுப்பையா ஆகியோர் பங்கேற்று, கண்டன உரை நிகழ்த்தினர். தொடர்ந்து கோஷங்களையும் எழுப்பினர்.

தலைப்புச்செய்திகள்