Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இனாம் கல்பாளையம் சக்தி நகரில் புதிய தார்ச்சாலை அமைக்க பூமிபூஜை

செப்டம்பர் 03, 2020 05:34

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் ஒன்றியம் இனாம் கல்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த சக்தி நகரில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைப்பதற்காக பூமிபூஜை போடப்பட்டது.

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் இனாம் கல்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த சக்திநகரில் 600 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் 1,500 மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக தார்ச்சாலை அமைத்து தரவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இனாம் கல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரின் முயற்சியால் சக்தி நகரில் தார்ச்சாலை அமைப்பதற்காக தமிழக அரசு 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

சக்தி நகரில் 1,290 மீட்டர் நீளத்திற்கு புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமிபூஜை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்தது. மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அ.தி.மு.க. பிரமுகர்கள் முருகன், ராமமூர்த்தி, ஊராட்சி செயலாளர் வெங்கடாஜலபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்