Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் தத்ரூப பாதுகாப்பு ஒத்திகை

செப்டம்பர் 03, 2020 05:53

ஆவடி: ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை   நடவடிக்கை பாதுகாப்பு ஒத்திகை தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பங்கேற்று வீரர்களின் ஒத்திகையை பார்வையிட்டு பாராட்டினார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஒத்திகை ஆவடி பருதிப்பட்டு பசுமை பூங்காவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் இயக்குனர் சைலேந்திர பாபு கலந்து கொண்டு பார்வையிட்டார்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மழை வெள்ள காலங்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை கொண்டு எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது எனவும், மேலும் தீயணைப்பு துறையில் உள்ள உபகரணங்களை பயன்படுத்தி பாதித்தோரை எவ்வாறு மீட்கலாம் என்பது குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

மேலும் வாழை மரம் கொண்டும் உபயோகப்படுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்படுவது போன்றும் தத்ரூபமாக தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். இதில், மத்திய சென்னை பகுதியை சேர்ந்த தீயணைப்பு படை வீரர்கள் 100க்கும் அதிகமானோர் பங்கேற்று ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு படகு குழாம் ஏரியில் செய்முறைகளை செய்து காட்டி அசத்தினர்.

தலைப்புச்செய்திகள்