Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10-வது தேர்ச்சியா?: ரூ.1.42 லட்சத்தில் உளவுத்துறையில் தாராள வேலைகள்!

செப்டம்பர் 03, 2020 05:54

புதுடெல்லி: மத்திய உளவுத்துறையில் காலியாக உள்ள புலனாய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.1.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிகளுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

உளவுத் துறை வேலை நிர்வாகம்: மத்திய உளவுத் துறை மேலாண்மை: மத்திய அரசு மொத்த காலிப்பணியிடங்கள்: 12 பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்: ஆய்வாளர் (கால்நடை)- 02, துணை ஆய்வாளர் (கால்நடை) - 07, ஆய்வாளர் (இந்தி மொழிபெயர்ப்பாளர்)- 03.

ஆய்வாளர் (கால்நடை) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியம் அல்லது பல்கலைக் கழகத்தில் முக்கிய பாடமாக உயிரியலுடன் அறிவியல் தேர்வில் (10 மற்றும் 12வகுப்பு) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வாளர் (இந்தி மொழிபெயர்ப்பாளர்) பணிக்கு முதுகலை பட்டப்படிப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6 பாடங்களும் இது தொடர்பானதாக இருக்க வேண்டும்.

ஆய்வாளர் பணிக்கு லெவல் 7-ன் படி ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையிலும், துணை ஆய்வாளர் பணிக்கு லெவல் 6-ன் படி ரூ.35,400 முதல் ரூ.1,12.400 வரையிலும், ஆய்வாளர் இந்தி மொழிப் பெயர்ப்பாளர் பணிக்கு லெவல் 7-யின் படி ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையிலும் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலே உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் mha.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும் முறையாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தைக் கீழே உள்ள முகவரிக்கு 15 செப்டம்பர் 2020 அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : Commandant (Pers-II), Directorate General, Sashastra Seema Bal, East Block-V, R.K. Puram, Sector-I, New Delhi - 11006

விண்ணப்பதாரர்கள் இ-பேங்கிங், டெபிட்கார்ட், கிரெடிட் கார்ட் அல்லது SBI வங்கி செல்லாக் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்தலாம். எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் ஆளுமைத்திறன் சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தலைப்புச்செய்திகள்