Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்கள்: நள்ளிரவில் பரபரப்பு

செப்டம்பர் 06, 2020 11:03

திருச்சி: திருச்சி அருகே பட்டா கத்தியுடன் கேக் வெட்டி இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரெளடிகள் பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாடி வந்தனர். இதை தொடர்ந்து இச்செயலை இளைஞர்களும் செய்து வந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம், முசிறியில் இளைஞர்கள் சிலர் முசிறி நகர பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். இதனை அங்கிருந்த நண்பர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வாட்ஸ் அப் வீடியோ காட்சி பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் வைரலாகி முசிறியில் பரவி வருகிறது. இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்களுக்கு ரெளடி செயல்பாடுகள் போல தற்போது இளைஞர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்