Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆதரவற்ற மூதாட்டியின் சடலத்தை இந்துமுறைப்படி எரியூட்டிய இஸ்லாமியர்கள்

செப்டம்பர் 08, 2020 05:32

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில்,  இந்து மதத்தைச் சார்ந்த, ஆதரவற்ற  மூதாட்டியின் சடலத்தை, இந்துமதச் சடங்குகள்படி இஸ்லாமிய தன்னார்வலர்கள் எரியூட்டினர்.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு,  பத்மநேரியில், "காஸ்ட் சேவை இல்லம்" என்னும் பெயரில், மத்திய- மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற, அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அனாதைகள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், குடும்பங்களை இழந்தோர் என, பலதரப்பட்டோர், இங்கு தங்க வைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுள் ஒருவரான 76 வயதுடைய,  பொன்னம்மாள் என்பவர், அவருடைய கணவர் இறந்த பிறகு, ஆதரிப்பதற்கு யாரும் இல்லாத காரணத்தால், இந்த இல்லத்தில் வைத்து, கடந்த 6 ஆண்டுகளாக, பராமரிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் வயது முதிர்வால் பொன்னம்மாள் உயிரிழந்தார்.

அவருடைய உடலைப் பெற்றுச் சென்று, தகனம் செய்வதற்கு, ஒருவர் கூட, முன்வரவில்லை. எனவே, சேவை இல்ல நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மூதாட்டியின் சடலத்தை, எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்கத் தலைவர் களந்தை மீராசா தலைமையில், மாவட்டப் பொதுச்செயலாளர் பீர்மஸ்தான் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பால் முகைதீன், சித்திக் ஆகியோர் முறைப்படி பெற்று,  திருநெல்வேலி வி.எம்.சத்திரம் மின் மயானத்தில், இந்துமத சம்பிரதாயப்படி எரியூட்டி, தகனம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்