Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மக்கள் தொடர்பு அதிகாரிக்கு கொரோனா:  நாமக்கல் கலெக்டர் தனிமைப்படுத்திக்கொண்டார்

செப்டம்பர் 08, 2020 08:18

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருப்பவர் மெகராஜ். இவர் கடந்த 5 மாதங்களாக கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் காணொலி காட்சி மூலம் அதிகாரிகளை அடிக்கடி தொடர்பு கொண்டு நோய்த் தடுப்பு பணிகளை செய்து வருவதுடன் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கும் நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சேந்தமங்கலம் அருகே உள்ள தலைமலையில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்று கிரிவல பாதை அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சென்ற நாமக்கல் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் மெகராஜ் 3-வது முறையாக தனக்கு கொரோனா பரிசோதனை செய்தார். பின்னர் கலெக்டர் பங்களாவில் தன்னைத்தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார். அங்கிருந்தபடியே அவர் தனது பணிகளை கவனித்து வருகிறார். இதனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை.

தலைப்புச்செய்திகள்