Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளித்தலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: உடனே அகற்ற நகராட்சி நடவடிக்கை

செப்டம்பர் 10, 2020 08:52

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி ஆணையர் முத்துக்குமாரை ஹிந்து சேனா தலைவர் அருள்வேலன் சந்தித்து தற்போது மழைகாலம் என்பதை முன்னிட்டு பொதுமக்கள் சார்பாகவும், ஹிந்து சேனா சார்பாகவும் சில கோரிக்கைகளை தெரிவித்தார்.

குளித்தலை கொல்லம்பட்டறை தெருவின் குறுக்குதெருவில் வசிக்கும் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான அந்த தெருவில் கழிவுநீர் செல்லாமல் அந்த தெருவிலேயே தேங்கி நிற்பதால் பல்வேறு தொற்றுநோய்களால்  பொதுமக்கள் அவதிபடுவதால் உடனே அதனை சரிசெய்ய வேண்டும்.

பஜனை மடம், அண்ணா நகர், வைகைநல்லூர் அக்ராஹரம், NGGO காலனி, பேராளம்மன் கோயில், ஆண்டார் வீதி பகுதிகளில் சேதமடைந்த கழிவுநீர் செல்லும் சிரிய, பெரிய கால்வாய் பாலங்கள் மற்றும் கழிவு நீர் செல்லும் சேதமடைந்த சாக்கடைகளை சரி செய்யவும் பொதுமக்கள் நலன் கருதி கோரிக்கைகளை வைத்தார்.

கோரிக்கைகளை கேட்ட ஆணையர் முத்துக்குமார், பொறியாளர் ராதாவிடம் அந்த இடங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். பொறியாளர் ராதா அந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பின் ஆணையரிடம் ஆய்வு பற்றி தெரிவித்தார். அதற்கு ஆணையர் முத்துகுமார் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அனைத்துவித நடவடிக்கைகளை விரைவில் எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் ஹிந்து சேனா மாநில தலைவர் அருள்வேலன் மற்றும் பொறுப்பாளர்கள் செந்தில், கருணாநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்