Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனி மாவட்டமாக கும்பகோணத்தை அறிவிக்க கோரி மகாமக குளக்கரையில் மனித சங்கிலி போராட்டம்

செப்டம்பர் 11, 2020 08:49

 

கும்பகோணம்: கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்களை போராட்டக்குழுவினர் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக வருகிற 15-ம் தேதி கும்பகோணத்தில் சென்னை பைபாஸ் சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக போராட்டக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.இதையடுத்து இந்த போராட்டத்தை கைவிடக் கோரி அமைதிப் பேச்சுவார்த்தை கும்பகோணம்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் விஜயன் தலைமை வகித்தார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி, நோய்த்தொற்று பரவல் காரணமாக மனித
சங்கிலி போராட்டத்தை குறைந்த நபர்களுடன் வருகிற 15ம் தேதி கும்பகோணம் மகாமக
குளக்கரையின் நான்கு புறத்திலும் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பொன்ராஜ் தேவர், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சங்கர், வர்த்தக சங்கத் தலைவர் சேகர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அய்யப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு பொறுப்பாளர் ரவீந்திரன், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் சங்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜகான், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் குடந்தை இப்ராஹீம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் குடந்தை ராஜா, நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்