Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பரமக்குடியில் பாதுகாப்பிற்கு 4,000 போலீசார்; இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்

செப்டம்பர் 11, 2020 09:11

ராமநாதபுரம்: இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர், என்று ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி பரமக்குடியில் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம்  பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று 11ம் தேதி நடைபெற்றது.  இதற்கு காவல் துறையின் சார்பாக பாதுகாப்பு பணிக்காக 4,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் தென்மண்டல ஐ.ஜி. முருகன், டி.ஐ.ஜி. மயில்வாகணன் மற்றும்  எஸ்.பி. கார்த்திக் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி கூறியதாவது: இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு ஐ.ஜி.க்கள், கூடுதல் ஐ.ஜி. காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர் உள்பட 4 ஆயிரம் போலீசார் 
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை, கோவை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து பாதுகாப்பிற்கு போலீசார் வரவழைக்கபட்டுள்ளனர். பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடம், ஓட்டபாலம் உட்பட 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் கண்காணிக்கப்படும். பரமக்குடியை சுற்றிலும் 65 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கபட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கபட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் அனுமதி அளிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை. எனவே, பொதுமக்கள் யாரும் அஞ்சலி செலுத்த வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் முரளி கூறினார்.

தலைப்புச்செய்திகள்