Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐகோர்ட் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, வைர நகைகள் கொள்ள

செப்டம்பர் 11, 2020 09:59

மதுரவாயல்: உயர்நீதிமன்ற வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை, வைர
நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் கே.எஸ்.குமார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு திருச்செந்தூருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்யும் பெண் வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த
பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வீட்டின்
உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது முகமூடி அணிந்து கொண்டு வீட்டு காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பதும் மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் பெட்டியையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மதுரவாயல் போலீசார் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்