Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அமெரிக்க அதிபர் தேர்தலில் பா.ஜ.க. பெயர் பயன்படுத்த தடை

செப்டம்பர் 11, 2020 11:27

புதுடெல்லி: அமெரிக்கா அதிபர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பெயர், கொடியை பயன்படுத்த திடீர் தடை விதித்ததற்கு காரணமே அதன் கிளை அமைப்புகள் மீது விசாரணை நடைபெறுவதாக வெளியான தகவல்கள்தான் என கூறப்படுகிறது.

ஆனால், அமெரிக்காவில் செயல்படும் பா.ஜ.க.வின் அயல்நாட்டு நண்பர்கள் அமைப்பு தங்கள் அமைப்பு மீது எந்த விசாரணையும் நடைபெறவில்லை என திட்டவட்டமாக மறுப்பு
தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பாரதிய ஜனதா கட்சியின் கிளை செயல்பட்டு வருகிறது பா.ஜ.க. அயல்நாட்டு நண்பர்கள் அமைப்பு தற்போதைய அமெரிக்கா அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக இந்த அமைப்பினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி- டிரம்ப் இருவரும் ஹூஸ்டன் மற்றும் அகமதாபாத்தில் இணைந்து பங்கேற்ற படங்களை இந்த தேர்தல் பிரசாரத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அயல்நாட்டு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த விசாரணையை அமெரிக்கா படுதீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அயல்நாட்டு அமைப்பு பதிவு சட்டத்தின் கீழ் அயல்நாட்டு அமைப்புகள் பதிவு செய்தாக வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் பா.ஜ.க. அயல்நாட்டு நண்பர்கள் அமைப்பும் அமெரிக்காவில் விசாரணை வளையத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதனையடுத்துதான் கட்சி பெயர், கொடி உள்ளிட்டவற்றை அமெரிக்கா அதிபர் தேர்தலில்
பா.ஜ.க. அயல்நாட்டு நண்பர்கள் அமைப்பு பயன்படுத்த பாரதிய ஜனதா கட்சி தடை
விதித்திருந்தது. இதனிடையே பா.ஜ.க. அயல்நாட்டு நண்பர்கள் அமைப்பு இது தொடர்பாக
விளக்கம் அளித்துள்ளது.

அதில், பா.ஜ.க. அயல்நாட்டு நண்பர்கள் அமைப்பு சட்டத்தின் கீழ் எங்கள் அமைப்பு பதிவு
செய்யப்பட்டுவிட்டது. குடும்ப சூழ்நிலைகள் காரணமாக அமைப்பின் தலைவர் பொறுப்பில்
இருந்து கிருஷ்ணா ரெட்டி பதவி விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அதப்பா பிரசாத் புதிய
தலைவராக பொறுப்பு வகிப்பார். மேலும் எங்கள் அமைப்பு மீது எந்த ஒரு விசாரணையும்
நடைபெறவில்லை என விளக்கம் அளித்திருக்கிறது.

தலைப்புச்செய்திகள்