Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எஸ்.டி.பி.ஐ. கபசுர மூலிகை குடிநீர் வழங்கல்

செப்டம்பர் 11, 2020 12:36

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில், எஸ்.டி.பி.ஐ. தொழிற்சங்கம் சார்பில், கபசுர மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. இதை எஸ்.டி.டி.யூ. மாவட்டத் தலைவர் களந்தை மீராசா துவக்கி வைத்தார். உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை எடுத்து வந்ததின் விளைவாக, தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக, குறைந்து வருகிறது.

இதனை முற்றிலும் இல்லாமல் ஆக்கிடும் வகையில், அரசு சார்பிலும், தனியார் துறைகள்
சார்பிலும், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், ஒவ்வொரு பகுதியிலும், கபசுர மூலிகை குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின்,
தொழிற்சங்கப் பிரிவான எஸ்.டி.டி.யூ. சார்பில், கபசுர மூலிகை குடிநீர் விநியோகம்
செய்யப்பட்டது.

அந்த அமைப்பின், வீரவநல்லூர் நகரத் தலைவர் சந்தனக்குமார் தலைமை
வகித்தார். செயலாளர் ஜோஸப்ராஜா முன்னிலை வகித்தார். எஸ்.டி.டி.யூ. மாவட்டத் தலைவர் களந்தை மீராசா மற்றும் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் மேரி ஜெமீதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு, கபசுர மூலிகை குடிநீர் விநியோகத்தைத் துவக்கி வைத்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டப் பொதுச்செயலாளர் பீர்மஸ்தான், வீரவநல்லூர் நகரத் தலைவர் வீரை சாகுல்அமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், கபசுர மூலிகை குடிநீர் அருந்தி பயனடைந்தனர்.

தலைப்புச்செய்திகள்