Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

செப்டம்பர் 11, 2020 01:10

மதுரை: திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் அ.தி..மு.க. சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.ராஜன்செல்லப்பா, சசிகலா விடுதலைபற்றிய கேள்விக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே
அ.தி.மு.க. சார்பில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி
நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன்
செல்லப்பா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன்
ஆகியோர் கலந்துகொண்டு 300 ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கினர்.

இதில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறும்போது கொரோனா காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி வழங்கப்பட்டு வருகிறது என்றார். பின்னர் செய்தியாளர்களின் சசிகலா விடுதலை பற்றிய கேள்விக்கு தற்போது இந்த கேள்வி தேவையற்றது எனக் கூறி தவிர்த்து விட்டு புறப்பட்டு சென்றார்.

தலைப்புச்செய்திகள்