Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பல்லாவரம் வாரச் சந்தை திறப்பு: மக்கள் மகிழ்ச்சி; வியாபாரிகள் வருத்தம்

செப்டம்பர் 11, 2020 05:31

சென்னை: சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நேற்று 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது. வழக்கம் போல் இல்லாமல் 500 கடைகள் மட்டுமே இயங்கியது. வியாபாரமும் மந்த நிலையில் தான் இருந்ததாக வணிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான பொது மக்கள் சந்தைக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான வியாபாரிகளுக்கு நேற்று சந்தை திறக்கப்படுவதாக எவ்வித அறிவிப்பும் கண்டோன்மெண்ட் நிர்வாகத்தால் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

முகக்கவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே சந்தைக்கு அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. உள்ளெ நுழையும் அனைவருக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதோடு. சந்தை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

வழக்கமாக 2,500 கடைகளுக்கு மேல் செயல்பட்டு வந்த பல்லாவரம் வாரச் சந்தையில் தற்போது 500 கடைகளுக்கும் குறைவாக இருந்ததால் குத்தைகாரர்கள் கண்டோன்மெண்ட் நிர்வாகம் தங்களுக்கு குத்தகை பணத்தை குறைக்குமாறு மனு கொடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்