Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

11 டன் ரேசன் அரிசி பறிமுதல்: டிரைவர் உட்பட 3 பேர் எஸ்கேப்

செப்டம்பர் 11, 2020 05:39

புளியங்குடி: புளியங்குடி அருகே கடத்தப்பட்ட 11 டன் ரேசன் அரிசியுடன் வந்த லோடுவேனை மண்டல துணை வட்டாட்சியர் மடக்கி பிடித்தார். அப்போது டிரைவர் உட்பட மூன்று பேரிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் தப்பி தலைமறைவாகினர்.

புளியங்குடியில் இருந்து நாகர்கோவிலுக்கு ரேசன் அரிசி கடத்தி செல்வதாக வட்டாட்சியர் ஞானசேகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக துணை வட்டாட்சியர் ஞானசேகரன் தலைமையில் தலைவன்கோட்டை வி.ஏ.ஓ. சின்னசாமி, புளியங்குடி தலையாரி ஆரோக்கியசாமி, கோட்டுர் சாமி ஆகியோர் புளியங்குடி சங்கரன்கோவில் மெயின்ரோட்டில் சென்ற போது முள்ளிக்குளம் அருகே ஒரு லோடுவேன் சென்றதை பார்த்து நிறுத்த சொன்னார்கள்.

ஆனால் லோடுவேன் நிற்காமல் சென்றதை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்று நகரம் அருகே பிடித்தனர். லோடுவேன் டிரைவர் உட்பட மூன்று பேர் இருந்தனர். அவர்களை வண்டியில் இருந்து இறக்கி அவர்களை விசாரித்து கொண்டு இருக்கும் போது திடீரென மூன்று பேரும் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

லாரியின் பின்புறம் பிளாஸ்டிக் கூடையை வைத்து மறைத்து அதன் பின்னால் அரிசி மூடைகளை ஏற்றி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உத்தேசமாக லாரியில் 11 டன் வரை அரிசி இருக்கும் என கூறப்படுகிறது. லாரியை புளியங்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புகார் கொடுக்கப்பட்டது.

தப்பி ஒட்டிய லோடுவேன் டிரைவர் என்ஜின் சாவியை தூக்கி கொண்டு ஓடி விட்டதால் வேனை ஸ்டார்ட் செய்ய முடிய வில்லை. பின் அருகிலுள்ள மெக்கானிக் மூலம் வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டு வந்தனர். அதிலும் புளியங்குடி பேருந்து நிலையம் வந்ததும் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. பின் அனைவரும் சேர்ந்து தள்ளி வந்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

தலைப்புச்செய்திகள்