Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 46 லட்சத்தை கடந்தது ..24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு தொற்று     

செப்டம்பர் 12, 2020 05:05

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 90 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 46,59,985 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,201 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,42,664ல் இருந்து 36,24,197 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 81533 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,58,316  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  உயிரிழப்பு 1.66 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 77.77 சதவீதமாகவும் உள்ளது.

தலைப்புச்செய்திகள்