Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மனைவி இறந்த அதிர்ச்சியில் பொதுப்பணித்துறை ஊழியரும் பலி

செப்டம்பர் 12, 2020 08:39

தஞ்சாவூர்: தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை லட்சுமி நகர் 2-ம் தெருவில் வசித்து வந்தவர் லாரன்ஸ்(வயது 64). பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பாத்திமா மேரி(60). இவர்களுக்கு ஜான் எட்வர்டுராஜ், ஸ்டீபன்ராஜ் ஆகிய 2 மகன்களும், கிளைமா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. லாரன்ஸ், பாத்திமாமேரி ஆகியோர் மகன்களுடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி பாத்திமா மேரிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அன்று இரவு பாத்திமா மேரி இறந்தார்.

மனைவி இறந்த செய்தி அறிந்த லாரன்ஸ் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார். வீட்டுக்கு வந்த மனைவியின் உடலை பார்த்தவுடன் அவரால் மனைவியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அருகில் சென்ற அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

மறுநாள் (9-ந் தேதி) மாலையில் பாத்திமாமேரி இறுதிச்சடங்கு நடந்தது. அவரது உடல் தஞ்சையில் உள்ள ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாரன்ஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

தலைப்புச்செய்திகள்