Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தவ் தாக்கரேவை விமர்சித்த கார்ட்டூன்: முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல்

செப்டம்பர் 12, 2020 10:04

மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் வசித்து வருபவர் மதன் சர்மா(62). முன்னாள் கடற்படை வீரரான இவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்து வந்த கார்ட்டூனை வாட்ஸ் ஆப் செயலியில் பகிர்ந்துள்ளார். 

இதனையடுத்து அவருக்கு மொபைலில் மிரட்டல் வந்தன. தொடர்ந்து, நேற்று (செப். 11) காலை 11:30 மணியளவில், கந்திவலி புறநகர் பகுதியான லோகந்வாலா காம்ப்ளக்சில், சிவசேனா கட்சியை சேர்ந்த 8- 10 கும்பல் அவரை வீட்டு வாசலில் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உறுதித்தொகையின் பேரில், ஜாமின் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் விகே சிங் கூறுகையில், மும்பையில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது. 62 வயதான முன்னாள் கடற்படை வீரர், குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். கார்ட்டூனை பகிர்ந்ததற்காக, ஒருவர் தாக்கப்பட்ட வேதனையை பாதுகாப்பு படையில் உள்ளவர்கள் அனைவரும் உணர்வார்கள். 

முதல்வர் உத்தவ்தாக்கரே, தலைவர் மற்றும் தேசியவாதி என்றால், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்