Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 13, 2020 08:35

திருநெல்வேலி :மேலப்பாளையத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கினை கண்டித்து, பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதி்ல் பல்வேறு கட்சிகள் பங்கேற்றனர். மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில், நீட் தேர்வு, இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை மற்றும் காவிரி நதி நீர் பங்கீட்டில், தமிழக உரிமைகள் பறிப்பு, மதவாத அரசியல் போன்ற, பல்வேறு மக்கள் விரோத போக்கினைக் கண்டித்து, திருநெல்வேலி மேலப்பாளையம், சந்தை ரவுண்டானா அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத்
தலைவர்கள் எஸ்.டி.பி.ஐ. எஸ்.எஸ்.ஏ.கனி, திராவிடர் கழகம் காசி, பாப்புலர் பிரண்ட் ஆப்
இந்தியா முகம்மது அலி, மாவட்டச் செயலாளர்கள் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி அப்துல் ஜப்பார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கரிசல் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன் ஆகியோர் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக, கோஷம் போட்டனர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின், மாநிலச் செயலாளர் அகமது நவவி சிறப்பு அழைப்பாளராக கலந்து
கொண்டு, கண்டன உரை நிகழ்த்தினார். இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக, நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளானோர், பங்கேற்று இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்