Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டாஸ்மாக் கடை திறப்பை கண்டித்த மக்கள் ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 13, 2020 08:41

திருப்பூரில்:தொடரும் டாஸ்மாக் போராட்டங்கள் திறப்பை கண்டித்து வால் போஸ்டர் ஒட்டி பொது மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக அரசு கடந்த காலங்களில் நாடு முழுவதும் 500 கடைகள் வீதம் இரண்டு முறை என ஆயிரம் கடைகள் அரசால் மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருப்பூர் மாவட்ட பகுதிகளான காங்கேயம், தாராபுரம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 12 கடைகள் திறப்பட்டுள்ளது. இன்னும் 8 கடைகள் வடக்கு சட்டமன்ற பகுதயில் திறக்க அனுமதி கோரி விண்ணப்பித்த நிலையில் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மட்டும் அங்கேரிபாளையம், முருகம்பாளையம் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து கட்சி மற்றும் பொது மக்கள் என அனைவரும் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

ஆனால் இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்து எதிர்பை
கண்டுகொள்ளாமல் மது கடைகளை திறந்து வருவது பொது மக்களை கவலையடைய
செய்துள்ளது. தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் செவி சாய்க்காத நிலையில் பள்ளிகள் அதிகம் உள்ள பகுதிகளில் கடையை திறக்க முயல்வதை கண்டு ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வால் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெரும்பரப்பு ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரஸ் பாதிப்பால் பணிகள் இன்றி தவித்து வரும் பொது மக்கள் கிடைக்கும் சம்பளத்தில் குடும்பத்தை பார்க்காமல் தள்ளபட இது ஒரு வாய்பாக அமைந்துள்ளது எனவும் குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள்.
 

தலைப்புச்செய்திகள்