Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மரத்தை சுற்றிலும் வீடு கட்டி வாலிபர் அசத்தல்

செப்டம்பர் 13, 2020 10:09

கும்பகோணம்: கும்பகோணத்தில் சேர்ந்த இளைஞர் ஒருவர் மரத்தை வெட்ட மனமில்லாமல் அதனை சுற்றி வீடு கட்டியுள்ளது, மக்களிடையே ஆச்சரியத்தையும், பாராட்டையும் பெற்று வருகிறது. வீடு, கடைகள் என கட்டடங்களை கட்டுவதற்கு அந்த இடத்தில் உள்ள மரங்களை வெட்டி, பின்னர் அங்கு கட்டடங்கள் கட்டுவர். ஆனால், மரங்கள் மற்றும் இயற்கை மீது அதீத பிரியம் கொண்ட அந்த இளைஞர் சற்று வித்தியாசமான முடிவு எடுத்து, மரங்கள் மீதான அன்பை நிரூபித்துள்ளார்.

கும்பகோணம் அரண்மனைக்காரன் தெரு பகுதியில் வசிப்பவர் வெங்கடேசன் இவருக்கு
சொந்தமான இடத்தில் தனக்கென்று ஓர் கனவு இல்லத்தை கட்ட வேண்டும் என 15 ஆண்டு காலகனவாக இருந்துள்ளார்

தனது குடும்பத்தாரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கனவு இல்லத்தை கட்டும் பணிகளை
மேற்கொள்ளும் சமயத்தில் இடத்தின் நடுவே 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழமையான வேப்ப மரம் ஒன்று வளர்ந்துள்ளது இதை அகற்றினால்தான் வீடு கட்ட முடியும் என்று பலரும் கூறிய பின்னும் மரத்தை வெட்ட மனமில்லாத வீட்டின் உரிமையாளர் தனது வீட்டின் நடுவே மரம் உள்ளது போல் வடிவமைத்து அதற்கு ஏற்றவாறு கனவு இல்லத்தை அமைத்துள்ளார்.

இவர் வடிவமைத்துள்ள இந்த இயற்கையுடன் ஒப்பிடும் வீட்டை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டு வீட்டின் உரிமையாளரை பாராட்டி செல்கின்றனர்.

தலைப்புச்செய்திகள்