Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரோட்டில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ.க்கள் துவக்கிவைப்பு

செப்டம்பர் 13, 2020 10:16

ஈரோடு: கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப்பணிகளை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு. ராமலிங்கம் ஆகியோர் ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் தொடங்கி வைத்தனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தியானபுரம் வீரப்பன்சத்திரம் எம்.ஜி.ஆர். வீதி
உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அங்கன்வாடி மையங்கள்,
பேருந்து மேல் கூடை, நியாயவிலை அங்காடி, சிறுவர் பூங்கா ஆகியன தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதிகள் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளையும், புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்தனர். இதையொட்டி இந்நிகழ்ச்சியில் அவர்கள் குத்து விளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர்.

தலைப்புச்செய்திகள்