Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள பொது அம்சங்கள்

மார்ச் 19, 2019 09:52

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவின் தேர்தல் அறிக்கைகள் இன்று வெளியிடப்பட்டன. இரண்டு கட்சிகளும், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளன. அதேசமயம், சில முக்கிய அம்சங்கள் இரண்டு தேர்தல் அறிக்கையிலும் பொதுவாக உள்ளன. அவற்றைப் பார்ப்போம்...  

மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்கவும், மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழி ஆக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் குறைக்கப்படும்.  

காவிரி டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும். மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.  
தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.  

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சில வாக்குறுதிகளை இரண்டு கட்சிகளும் கொடுத்திருப்பதால், இந்த வாக்குதிகள் எந்த அளவுக்கு வாக்காளர்களை ஈர்க்கும்? என்பதை இப்போது கணிக்க இயலாது. தேசிய கட்சிகளின் தேர்தல் அறிக்கையும் வெளியாகி, பிரச்சாரம் தீவிரமடையும்போது வாக்காளர்களின் மனநிலை தெரியவரும். 

தலைப்புச்செய்திகள்