Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

செப்டம்பர் 14, 2020 09:13

திருநெல்வேலி:இந்திய சான்றியல் சட்டத்தில், சீரமைப்பு தேவையா? என்ற ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள, சீராய்வுக்குழு அறிவித்துள்ள, "இந்திய சான்றியல் சட்டத்தில்,  சீரமைப்புத் தேவையா?" என்பது சம்பந்தமாக, திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.சிவசூரிய நாராயணன், ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

சங்கச் செயலாளர் பி.செந்தில் குமார் முன்னிலையில், வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி   ஏ.நசீர் அகமது வெளியிட்டார். அதன் முதல் பிரதியை "மூத்த வழக்கறிஞர்" கே.ஜெயபாலன் பெற்றுக் கொண்டார். இந்த ஆய்வு நுால் வெளியீட்டு விழாவில் சங்கத்தின் மற்ற நிர்வாகிகளும், கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்