Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வுக்கு எதிராக பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 14, 2020 09:46

புதுடெல்லி:மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று பாராளுமன்றத்திற்கு வந்த தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக, முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது. கூட்டம் நடத்துவதற்காக இருசபைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 8 மணிக்கே எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வரத் தொடங்கினர். 

இந்நிலையில், முதல் நாளான நேற்று பாராளுமன்றத்திற்கு வந்த தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும், பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை ஆகியவற்றை திரும்ப பெறக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட மாஸ்க் அணிந்திருந்தனர். மக்களவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தலைப்புச்செய்திகள்