Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழை மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பு

செப்டம்பர் 14, 2020 10:32

சென்னை:ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கின்றது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும். 

வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்     (சென்டிமீட்டரில்) திருத்தணி 9, சின்னக்கல்லார் (கோவை), திருப்பத்தூர் தலா 7, வால்பாறை   (கோவை),  திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 5,  மேட்டூர் (சேலம்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்) தலா 4 சென்டி மீட்டர் மழைபெய்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

செப்டம்பர் 14: ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 14,15: கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். செப்டம்பர் 18: மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். கடல் உயர்அலை முன்னறிவிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 15.09.2020 இரவு 11.30  மணி வரை கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை எழும்பக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்