Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம் தி.மு.க. அ.தி.மு.க.வினர் மரியாதை

செப்டம்பர் 15, 2020 09:00

காஞ்சிபுரம்:பேரறிஞர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் விழா காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு, அ.தி.மு.க. தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அரசு அதிகாரிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தி.மு.க. சார்பில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.வுமான சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதே போல் காஞ்சிபுரம் பெரு நகராட்சி, கருக்குப்பேட்டை, அய்யம்பேட்டை பகுதிகளில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு ஏழை, எளியோருக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்