Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிறந்த குழந்தையை காட்ட ரூ,5,000 லஞ்சம்: ஒசூர் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 16, 2020 07:41

ஒசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்வார்கள். மேலும் ஒசூர் மாநகராட்சியில் மக்கள்தொகை அதிகமாக இருப்பதால் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு அதிக சலுகைகள் வழங்கியுள்ளதால் பெரும்பாலான பிரசவங்கள் அனைத்தும் ஒசூர் மருத்துவமனையில் தான் நடக்கின்றன. இந்நிலையில் ஒசூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் அறையில் செவிலியர்களுக்கு உதவியாளர்களாக இருக்கும் நபர்கள் பிரசவம் முடிந்தவுடன் குழந்தைகளை காட்ட பணம் கேட்பதாகவும் பணம் கொடுக்காவிட்டால் குழந்தை காட்ட மறுப்பதாகவும் மற்றும் பிரசவத்துக்கு வரும் தாய்மார்களை தரக்குறைவாக பேசுவதாகவும் நோயாளிகளுக்கு வீல்சேர் கொடுக்காமல் குப்பைகளை அள்ளி எடுத்துச் செல்ல பயன்படுத்தி வருவம் உபகரணங்களை பயன்படுத்தி அநாகரீக செயல்கள் அரங்கேறி வருகிறது. கடந்த சில மாதங்களாக இது போன்ற சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வரும் நிலையில்,  மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறக் கூடாது என பிரசவ வார்டில் உள்ள தாய்மார்களின் உறவினர்களும், பெற்றோர்களும் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசவ வலியுடன் வரும் தாய்மார்களை அடித்து துன்புறுத்துவதாகவும் தகாத வார்த்தையில் பேசுவதும் மனிதாபிமானமின்றி பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்கள் நாள் தோறும் வெளிவருகிறது. இதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு தலைமை மருத்துவரை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் இதுதொடர்பாக புகாரினை அரசு தலைமை மருத்துவரிடம் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட அரசு தலைமை மருத்துவர் பூபதி புகாரின் அடிப்படையில் செவிலியர்களின் உதவியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியும் மேலும் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த தாய்மார்களை அடித்த தமிழ்வாணன் என்ற உதவியாளர் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் இந்த சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டாலும் அனைவரின் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய பிறகு மருத்துவமனையை முற்றுகையிட நபர்கள் கலைந்து சென்றனர்.
 

தலைப்புச்செய்திகள்