Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு 

செப்டம்பர் 16, 2020 08:18

சேலம்:காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது. 120 அடி மொத்த கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 91.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12,894 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. அணையின் நீர் இருப்பு 54.70 டி.எம்.சி. ஆக இருந்தது. நேற்றுமுன்தினம் காலை வினாடிக்கு 8,622 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 12,894 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியிலிருந்து 16,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 

தலைப்புச்செய்திகள்