Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதுநிலை மருத்துவ கலந்தாய்வு: தமிழக அரசின் மனு தள்ளுபடி

செப்டம்பர் 16, 2020 08:31

புதுடெல்லி:முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முதுநிலை மருத்துவ கலந்தாய்வு ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக் கோரிய மனு நிலுவையில் உள்ளது.

இதனால் முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது மத்திய அரசு சார்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தற்போது தமிழகத்துக்கு கால நீட்டிப்பு அளித்தால் அதை போல் பிற மாநிலங்களும் கலந்தாய்வு தேதியை நீட்டிக்க கோருவார்கள். எனவே, கூடுதல் காலஅவகாசம் கொடுக்க முடியாது. ஒரு நாள் கூட நீட்டிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் மனு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதுநிலை மருத்துவ கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தலைப்புச்செய்திகள்