Sunday, 23rd June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய மாணவர் சங்கம் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 17, 2020 06:38

திருச்சி:நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில்  திருச்சி பழைய பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் சூர்யா, சட்டக்கல்லூரி கிளை நிர்வாகி சதீஷ், பொன்மலை பகுதித் தலைவர் பிரேம் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டினர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்