Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை ஆர்ய வைத்திய பார்மஸி இயக்குநர் கொரோனாவால் மரணம்: மோடி இரங்கல்

செப்டம்பர் 17, 2020 06:47

சென்னை:கோவை ஆர்ய வைத்திய பார்மஸியின் நிர்வாக இயக்குநரும் அவினாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் வேந்தருமான பி.ஆர். கிருஷ்ணகுமார் கொரோனாவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரளாவின் சோரனூரில் 1951-ம் ஆண்டு பிறந்தவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார். இந்தியாவின் மிக சிறந்த ஆயுர் வேத நிறுவனமான கோவை ஆர்ய வைத்திய பார்மஸியை உருவாக்கினார். பி.ஆர். கிருஷ்ணகுமாரின் சேவைக்காக 2009-ல் மத்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியது. 2011-ல் கர்நாடகா குவேம்பு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. 2015-ம் ஆண்டு முதல் கோவை அவினாசிலிங்கம் கல்லூரியின் வேந்தராகவும் பணியாற்றி வந்தார்.

கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி நடத்திய உரையாடல்களில் பங்கேற்று, சித்தா, ஆயுர்வேத சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் கிருஷ்ணகுமார். கோவையின் ஆளுமைகளில் ஒருவரான கிருஷ்ணகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பி.ஆர்.கிருஷ்ணகுமார் காலமானார்.
பி.ஆர். கிருஷ்ணகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


 

தலைப்புச்செய்திகள்