Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வுக்கு எதிராக போராடும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்

செப்டம்பர் 18, 2020 07:12

திருவள்ளுர்:''நீட் தேர்வுக்கு எதிராக போராடும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான்,''  என்று  அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார். திருவள்ளுர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், தமிழக அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தங்களை அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதற்கான சான்றுகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது:

காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் உள்ள முதல்வர்கள் எல்லாம் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், நீட் தேர்வை எதிர்த்து போராடக்கூடிய ஒரு இயக்கம் உண்டு என்றால் அது அ.தி.மு.க. தான்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்

தலைப்புச்செய்திகள்