Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் கிசான் திட்ட வேளாண் மோசடி: அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது-பொன்முடி

செப்டம்பர் 18, 2020 07:17

சென்னை:மத்திய அரசின் பிரதமர் கிசான் திட்டம் குறித்து சட்டபேரவையில் கொண்டு வரப்பட்டது. இதில் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும், மாநில அரசு தான் கணக்கெடுப்பு நடத்தும், மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்பு இருக்கும். மாநில அரசிற்கும் பொறுப்பு இருக்கிறது.
நிலம் இல்லாத, விவசாயிகள் இல்லாதவர்களுக்கு இந்த பணம் போய் சேர்ந்து உள்ளது. 110 கோடி ரூபாய் ஊழல் என அமைச்சரே ஒப்பு கொண்டுவிட்டார். கான்ட்ராக் பணியாளர்களை தான் கைது செய்து இருக்கிறார்கள். இதில் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் பங்கு இருக்க வாய்ப்பு உள்ளது. இதனை சி.பி.சி.ஐடி வைத்து விசாரிக்காமல் சி.பி.ஐ வைத்து விசாரிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது சென்னை, திருச்சி,  கோவை, மதுரை, நெல்லை அண்ணா பல்கலைக்கழக கிளைகளை உருவாக்கினோம். அ.தி.மு.க. அரசு கிளை அலுவகங்களை ரத்து செய்து விட்டு சென்னையில் மட்டும் நிர்வகித்து வருகிறது. ஆராய்சிக்காக பிரிப்பதில் தவறு இல்லை.  தி.மு.க. ஆட்சியில் இருந்ததை போல் ஐந்து இடத்தில் அண்ணா பல்கலைக்கழக கிளைகளை உருவாக்கினால் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிப்பதில் எளிதாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு ஏ.ஐ.சி.டி.இ கடிதம் எழுதி இருப்பதாக அவரே தெரிவித்து இருந்தார். ஆனால், இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் தனிப்பட்ட முறையில் சூரப்பா கடிதம் எழுதி இருக்கிறார் என தெரிவிக்கிறார்.

அரியர் மாணவர்கள் விவகாரத்தில் விவரம் தெளிவாக இல்லை. பணம் கட்டாத மாணவர்களுக்கு பணம் செலுத்த வாய்ப்பு கொடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கு அரசு என்ன பதில் தெரிவிக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு பொன்முடி தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்