Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடிக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்து 

செப்டம்பர் 18, 2020 07:26

சென்னை:பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்குள் உள்ள கடினமான மனிதர் அதிக வலிமையைப் பெற வாழ்த்துகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்,” என பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்