Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல்: சாப்ட்வேர் நிறுவன ஊழியர் கைது

செப்டம்பர் 18, 2020 07:51

திருவள்ளூர்:போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளம் பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வளர்க்கும் நாயுடன் நடைபயிற்சி சென்ற போது அந்த வழியே வந்த மர்ம நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து அந்த நபரை தான் கண்டுபிடிக்கபோவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அந்த பெண் பதிவிட்டு இருந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அந்த நபரை தேடி வந்தனர். இதில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் திண்டிவனத்தை சேர்ந்த ஆதாம் அலி(25), என்பதும் முகலிவாக்கத்தில் தங்கி சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது விளையாட்டிற்காக அந்த பெண்ணிற்கு பாலியல் சீண்டல் தந்ததாகவும், இவருக்கு திண்டிவனத்தில் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததும் தெரியவந்தது. திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த கையோடு சென்னைக்கு வந்த அந்த நபரை மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபர் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்த மறுநாளே கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்