Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலைக்கு தமிழக அரசாணை வெளியீடு

செப்டம்பர் 20, 2020 07:20

சென்னை:கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், இறுதியாண்டு மாணவக்ளுக்கான தேர்வுகள் குறித்து பல்வேறு குளறுபடிகள் நீடித்து வந்தன.

இந்நிலையில், பருவத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்றும், மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வு முறை குறித்த முக்கிய அறிவிப்பு சென்னை பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவிய காலம் முதலே மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வந்தாலும் மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான மனநிலையே நீடித்து வருகிறது.

குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, சில தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் அடுக்கடுக்காக குவிக்கப்பட்டன.  இருப்பினும், கல்லூரி பருவத் தேர்வுகளில் பல்வேறு வித குளறுபடிகள் நீடித்தபடியே இருந்து வருகிறது. முன்னதாக கலை, அறிவியல் மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லை என அறிவிக்கப்பட்டது. பொறியியல் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி உள்ளிட்ட அறிவிப்புகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, கல்லூரி இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவத் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்தியுள்ள மாணவர்களுக்குத் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையால், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின்படி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  இந்நிலையில், பல்கலைக் கழகத்தில் நிலுவையில் உள்ள தேர்வுகள் வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நடைபெறும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் சமீபத்தில் தெரிவித்தார்.

மேலும், அண்ணா பல்கலைக் கழக பொறியியல் மாணவர்களுக்கு இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ள நிலையில் விரைவில் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்தது. மேலும், இந்த இறுதிப் பருவத் தேர்வானது ஆன்லைன் அல்லது நேரடியாக நடத்தப்பட உள்ளது. எனவே, மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக இருங்கள் என அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது சென்னை பல்கலைக் கழக மாணவர்களுக்கு பருவத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், சென்னை பல்கலை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை வீட்டில் இருந்தே ஏ4 தாளில் எழுதி அனுப்பலாம் என சென்னை பல்கலை அறிவித்துள்ளது.  இறுதியாண்டு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்ய யு.ஜி.சி. அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துவது குறித்து தகவல் வெளியானது. ஆனால், இந்த நடைமுறையில் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு எழுதுவதற்கான வசதிகள் இல்லை எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைன் வழியில் தேர்வு இல்லை என்றும், மாணவர்கள் வீட்டில் இருந்த படி ஏ4 தாளில் தேர்வு எழுதி கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு வினாத்தாள் தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு அந்தந்த மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

பருவத் தேர்வுகளை வீட்டிலிருந்தபடியே எழுதி, இறுதி விடைத்தாள்களை விரைவுத் தபால் மூலம் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
காலை 10 மணி முதல் 11 மணி வரை, பகல் 2 மணி முதல் 3 மணி வரையும் என ஒவ்வொரு தேர்வும் 90 நிமிடங்களுக்கு நடைபெறும். விடை எழுதும் ஏ4 தாள்களின் ஒவ்வொரு பக்கத்திலும் மாணவர்களின் பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு 18 தாள்களுக்கு மிகாமல் எழுதி அனுப்ப வேண்டும்.
இவ்வாறு சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்