Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேளாண் மசோதா மீது மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பு

செப்டம்பர் 21, 2020 07:40

புதுடெல்லி: விவசாயிகளுக்கான உற்பத்தி வா்த்தகம் மற்றும் வணிகம் (மேம்படுத்துதல் மற்றும் வசதி ஏற்படுத்தித் தருதல்) மசோதா, விவசாயிகளுக்கான (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஒப்பந்த மசோதா, அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய அந்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவைக்கு வந்தன. 

இதில், 2 முக்கிய மசோதாக்கள் நேற்று நிறைவேறின. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, அவையில் ஏற்பட்ட அமளிக்கு மத்தியில் இரண்டு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாக்கள் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த முக்கிய திருத்தங்கள் ஏற்கப்படவில்லை. அவையில் அரசுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், குளறுபடி செய்து குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
 

தலைப்புச்செய்திகள்