Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பீகாரில் 9 நெடுஞ்சாலை திட்டங்கள் -  பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

செப்டம்பர் 21, 2020 10:33

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 14,258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 350 கிமீ நீளத்திற்கு இந்த சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். இதேபோல், பீகாரில் 45,945 கிராமங்கள் இன்டர்நெட் வசதி பெறும் வகையிலான கண்ணாடி இழை இன்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தினையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பீகாரில் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்திற்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் துவக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்