Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுகாதாரத்துறை ஆய்வாளரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்

செப்டம்பர் 22, 2020 09:40

கோவை : கோவை சுகாதாரத்துறை ஆய்வாளர் சாதி ரீதியாக திட்டியதால் அவரைக் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரதான வார்டில் இங்கு நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சவுரிபாளையம் பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது இந்த வார்டு. 

இங்கு சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பவுன்ராஜ். இவர் அவ்வப்போது அங்கு பணியிலிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் தீண்டாமை என்ற நிலையில் சாதியின் பெயரில் இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. பெண்கள் தங்களின் அவசர தேவைக்காக ஏதேனும் வெளியில் சென்றால்கூட அதனையும் மையப்படுத்தி அவதூறாக பேசியிருப்பதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உடனடியாக அந்த சுகாதார ஆய்வாளரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த அதிகாரிகளும் அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள்  சுகாதார ஆய்வாளர் மீது படவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்