Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரியில் 75,000 கனஅடி நீர் திறப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு 

செப்டம்பர் 22, 2020 09:43

பெங்களுரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. அங்குள்ள கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து 75,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் அதிகஅளவில் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரில் அளவு 35,000 கடி அடியாக உயர்ந்துள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் விரைவில் மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகின்றன. கர்நாடகா அணைகளில் இருந்து விநாடிக்கு 75,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 40,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் பகுதிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளநீர் அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் நீராடவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்