Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

லண்டனில் நிரவ் மோடி கைது

மார்ச் 20, 2019 10:19

புதுடில்லி: வங்கியில் மோசடி செய்து, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் பதுங்கியிருந்த வைர வியாபாரி நிரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.  
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், தன் உறவினர் மெஹுல் சோக்சியுடன் சேர்ந்து, 13 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி. முறைகேடு வெளியில் தெரிந்ததும், இருவரும் வெளிநாடுக்கு தப்பியோடி விட்டனர். இருவரையும் பிடிக்க, சர்வதேச போலீசான, 'இன்டர்போலின்' உதவியை, சி.பி.ஐ., நாடியது. 

இந்நிலையில், பிரிட்டனில் நிரவ் மோடி பதுங்கியிருப்பது தெரிந்தது. இவனை, இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், நிரவ் மோடி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதை, அந்நாட்டு பத்திரிகை ஆதாரங்களுடன் வெளியிட்டது. 

இந்நிலையில், நிரவ் மோடிக்கு எதிராக, லண்டனில் உள்ள, வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 18 ம் தேதி, கைது வாரன்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தனர். அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். நிரவ் மோடி கைதை தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்